கனடாவில் ஆபத்தானவர் என அறிவிக்கப்பட்டு பொலிஸாரினால் தேடப்படும் தமிழர்
கனடாவில் கொலை குற்றத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். எவ்வாறாயினும், குறித்த நபர் ஆபத்தானவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள 34 வயதான Ryan என்ற பெயரால் அறியப்படும் சதீஸ்குமார் ராஜரத்தினம் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை காலை 11.40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் ரோடு மற்றும் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் வந்து பார்த்தபோது, பாதிக்கப்பட்டவர் ஒரு கட்டிடத்தின் முகப்பில் பலத்த காயங்களுடன் கிடந்ததை கண்டனர். துணை மருத்துவர்கள் அந்த நபரை அருகிலுள்ள வைத்தியசாலைக்ககொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் நிலை கொலைக்காக தேடப்படும் நபர்
உயிரிழந்தவர் டொராண்டோவை சேர்ந்த 38 வயதான லியோன் டைரெல் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இரண்டாம் நிலை கொலைக்காக தேடப்பட்டு வரும் சதீஸ்குமார் ராஜரத்தினத்திற்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் ஆறடி-ஒரு அங்குல உயரம், மெல்லிய உடலமைப்பு, பழுப்பு நிற கண்கள் மற்றும் இருபுறமும் மொட்டையடிக்கப்பட்ட கருமையான கூந்தல் என விவரிக்கப்படுகிறார். அவர் மார்பு மற்றும் தோள்கள் இரண்டிலும் பச்சை குத்தியுள்ளார்.
ராஜரத்தினம் ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படுவதாகவும் அவர் வன்முறையாளர் மற்றும் ஆபத்தானவராகக் கருதப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள் காவல்துறை அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.