இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறியுள்ள ஒமிக்ரோன் தொற்று! - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள குர்விட்-19 நோயாளர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் விரைவா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக இருக்கலாம் என சுகாதாரத் துறை சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, கோவிட் வைரஸிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், கோவிட் நோய்த்தொற்றால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்க அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் பெறுவதை உறுதிசெய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
