இதுவரை அகற்றப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் : ஸார்ப் நிறுவனத்தின் அறிக்கை (PHOTOS)
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இதுவரை பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸார்ப் நிறுவனம் இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதினெட்டு இலட்சத்து ஒன்பதாயிரத்து அறுநூற்று நாற்பத்தேழு சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பதாயிரத்து நானூற்று பதினான்கு அபாயகரமான வெடிபொருட்கள் இதுவரை அகற்றியுள்ளதாக குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







