அவுஸ்திரேலியாவில் பரவும் ஆபத்தான போதைப்பொருள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அவுஸ்திரேலியா - மெல்போர்னில் பரவும் ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு விக்டோரிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.டி.எம்.ஏ என்றும் அழைக்கப்படும் இந்தப் போதைப்பொருள், பி.எம்.எம்.ஏ என்ற பொருளைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது அதிக நச்சுத்தன்மைக் கொண்ட, தாக்கத்தை அடைய அதிக நேரம் எடுக்கும் என்று விக்டோரியன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
எடுக்கப்பட்ட அளவைப் பொறுத்து, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் கடுமையான தீங்கு விளைவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
ஆபத்தான உடல் வெப்பநிலை, உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் கடுமையான மூச்சுத் திணறல்,இதயத் தடுப்பு, வலிப்பு, திடீர் சரிவு, பல உறுப்பு செயலிழப்பு மற்றும் இறப்பு ஆகியவை இந்த தீமைகளில் அடங்கும் என்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
