இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் செயற்கை மரிஜுவானா அல்லது "K-2-Sit" என்ற போதைப்பொருள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதிகளவில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த செயற்பாட்டை உடன் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ் தலைமை அதிகாரிகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பாவனை
குறித்த போதை மருந்துகள் உடலில் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், மக்களை மிகவும் மோசமான மனநிலை பாதிப்பிற்கு உள்ளாக்குவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு இட்டுச் செல்லக்கூடிய நபர்கள் மற்றும் இடங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
