பிரித்தானியாவில் ஆபத்தாகியுள்ள கோவிட் தொற்று!
ஏழு நாட்கள் வீழ்ச்சியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட புதிய கோவிட் - 19 வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் 31,117 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன், 85 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பதிவாகிய தரவுகளுடன் ஒப்பிடும் போது, சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றுநோய்களுக்கான ஏழு நாள் சராசரி முந்தைய வாரத்தை விட 37.1 வீதம் குறைவாக இருந்துள்ளது. எனினும் உயிரிழப்புகள் 28.9 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தொற்று காரணமாக இதுவரையில் மொத்தம் 129,515 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 932 கோவிட் தொற்றாளர்கள் கடந்த 25ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏழு நாட்களில் 6,288 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்றைய தினம் 43,873 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளதாகவும், 171,341 பேருக்கு இரண்டாவது அளவு செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மொத்தம் 46,733,115 பேருக்கு முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளதாகவும், 37,782,252 பேருக்கு இரண்டாவது அளவு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.