இந்தியாவின் அதிருப்திக்கு மத்தியில் இலங்கை வரும் சீன கப்பலின் ஆபத்தான திறன்கள்!
இந்தியாவின் அதிருப்தி, இலங்கையின் ராஜதந்திர சர்ச்சைக்கு மத்தியில் சீன கடற்படை கப்பல் யுவான் வாங் 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த கப்பல் தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த கப்பலின் திறன் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவான் வாங் 5, சீனக் கப்பலானது ஆபத்தான் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சீன கப்பலின் ஆபத்தான திறன்கள்
இதன் மூலம் செயற்கைக்கோள்கள் மற்றும் இராணுவ நிறுவல்களை கண்காணிக்க முடியும். இது யுவான் வாங் தொடரின் 3வது தலைமுறை கண்காணிப்பு கப்பல் மற்றும் 750 கிலோமீட்டர் வான்வழி வரம்பைக் கொண்டுள்ளது.
அதாவது, சுமார் ஆறு தென்னிந்திய துறைமுகங்கள் மற்றும் பல அணுமின் நிலையங்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட, இந்த கப்பலின் வரம்பிற்குள் அவை அனைத்தையும் கண்காணிக்க முடியும் என்று இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதிகள் பாரம்பரியமாக இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள் கருதப்படுகின்றன. மேலும் சில முக்கியமான உலகளாவிய வர்த்தக கடல் பாதைகள் இருக்கும் இந்த நீரில் இந்திய கடற்படை வழக்கமான இருப்பைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் கவலை
இந்தநிலையில் இங்கு சீனப் பிரவேசம் இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயமாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி சீனாவின் குத்ததைக்குள் இருக்கும்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஆகஸ்ட் 17ஆம் திகதி திரும்பிச் செல்லும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.