மலையகத்துக்கான தொடருந்துகளில் வெளிநாட்டவர்களின் ஆபத்தான செயல்கள்
மலையகத்துக்கான பிரதான தொடருந்துகளில் பாதுகாப்பற்ற நடத்தையில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும், தொடருந்து கதவுகளுக்கு வெளியே சாய்ந்து, கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு, அபாயங்களைக் கூட கவனிக்காமல் புகைப்படம் எடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியான சோக சம்பவங்கள்
சமூக ஊடகங்களில் இந்த செயல்கள் வீரச்செயல்களாக பிரபலம் அடைந்திருந்தாலும், இந்த ஆண்டில் இந்த சம்பவங்களால் தொடர்ச்சியான சோக சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும், அண்மையில், ஓஹியா மற்றும் இதல்கசின்ன பகுதிக்கு அருகில் வைத்து, புகைப்பட்ம் எடுக்க முயன்றபோது ஒரு ஈரானிய பெண் ஒரு சுரங்கப்பாதை தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், அவர் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
