சீனாவில் தயாரிக்கப்படும் ரயில் என்ஜின்களால் பொது மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து
சீனாவில் தயாரிக்கப்பட்டு இலங்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் தொடரூந்துப் பெட்டிகள் அடங்கிய தொடரூந்து இயந்திரங்களை இயக்குவதற்கு சாரதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த புறக்கணிப்பு குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லோக்கோமோட்டிவ் இயந்திர செயற்பாட்டாளர்கள் சங்கச் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
தொடரூந்து இயந்திரங்களின் தடைஆளியை (பிரேக்) அழுத்தும் போது சீனாவில் தயாரிக்கப்படும் தொடரூந்துப் பெட்டிகள் சிறிது தூரத்துக்கு சென்று நிறுத்தப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பொது மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த செப்ம்பர் மாதத்திலும் இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அப்போதைய அமைச்சர் காமினி லொக்குகே இது தொடர்பான அறிக்கை ஒன்றை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
