டிஜிட்டல் அடையாள அட்டையால் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்து

Vaccine Sri Lanka Information Digital Identity Card
By Mayuri May 14, 2021 05:32 AM GMT
Report

தடுப்பூசிக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படும் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தனியுரிமை இலங்கையில் ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதன் மூலம் ஆபத்து அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மிகவும் திறமையாக செயற்படுத்தும் வகையில், அடுத்த சில நாட்களில் டிஜிட்டல் அடையாள அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமும் அறிவித்துள்ளன.

கோவிட்டைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை சரியானது மற்றும் பாராட்டத்தக்கது என்றாலும், இலங்கை அரசின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான கொள்கைகளை வகுப்பதில் மிகவும் பின்தங்கியிருப்பதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளை இராணுவத்திற்கு ஒப்படைத்ததன் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் தனிப்பட்ட தரவுகளை இராணுவம் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, சிவில் செயற்பாட்டாளர்கள் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அனைவரின் தரவும் தனது கைத்தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் முன்னதாக கூறியிருந்தார்.

டிஜிட்டல் ஆரோக்கியத்தில் நோயாளிகள் அல்லது சுகாதாரப் சேவையை பெறுபவர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல நாடுகளில் பல்வேறு கொள்கைகள் மற்றும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக, இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ யசிரு குருவிட்ட அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளார்.

சுகாதார காப்பீட்டு பெயர்வுத்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் சட்டத்தின் ஊடாக (Health Insurance Portability and Accountability Act அமெரிக்க குடிமக்களின் சுகாதாரத் தரவைப் பாதுகாப்பதற்கான பொறுப்புக்கூறல் ஏற்பாடு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation) குடிமக்களின் சுகாதார தரவுகள் உள்ளிட்ட பிற தரவுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

இந்தியாவில் சுகாதாரத் தரவுகள் 'உணர்ச்சிப்பூர்வமான தனிப்பட்ட தரவு' என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ரஜீவ யசிரு குருவிட்ட தெரிவித்துள்ளார்.

தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் சைபர் பாதுகாப்பு சட்டம் ஆகியவை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாத நிலையில், தடுப்பூசிக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவது எதிர்காலத்தில் ஆபத்தான காரணியாக இருக்கலாம் என்பதால், டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு முன்னர் பொதுமக்களின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென இலங்கையின் தகவல் தொழிநுட்ப சங்கம் அரசுக்கு தெரிவித்துள்ளது.

விரைவாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்துடனான கலந்துரையாடலின் விளைவாக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய டிஜிட்டல் அடையாள அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்படுமென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

கோவிட் தடுப்பூசி மிகவும் திறமையாக செய்ய அடுத்த சில நாட்கள். தடுப்பூசி வழங்கல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டை ஊடாக ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் கொவிட் தடுப்பூசி வழங்கிய திகதி, இடம், நேரம் மற்றும் தடுப்பூசி வகை மற்றும் அது தொடர்பான தகவல்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி வழங்க வேண்டிய திகதி, இடம், நேரம் உள்ளிட்ட அத்தியவசிய தகவல்கள் பல நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் அரச அமைப்பு குறித்து தெளிவாக விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது முதன்முறையாக நடைமுறைக்கு கொண்டு வந்து தடுப்பூசி தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய புதிய டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் தொழில்நுட்பம் மற்றும் இணைய பயன்பாட்டினூடாக தடுப்பூசி தொடர்பான சிக்கல்களை தவிர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.

“டிஜிட்டல்மயமாக்கல் என்பது அடுத்த தலைமுறையினர் பொது சேவைகளை திறம்பட பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையாகும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, இராமநாதபுரம்

28 Nov, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், Hamburg, Germany

26 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US