பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து
பாரிஸின் புறநகர் பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழும் செய்ன்-சன்-துனி மாவட்டத்தில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்துவிழும் அபாயம் உள்ளதால் அதில் வசித்த 150 குடும்பங்கள் வெளியேறப்பட்ட உள்ளன.
Epinay-sur-Seine நகரில் உள்ள ஓபேலிக்ஸ் (Obélisque) கட்டிடமே இந்த ஆபத்தில் சிக்கியுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 500 பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
32 அடுக்குகள் கொண்ட குறித்த கட்டிடம் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. குறித்த கட்டிடம் தற்போது இடிந்து விழும் அபாயத்தை சந்தித்துள்ளது.
தங்களின் பாதுகாப்பினை கருதி கட்டிடத்தில் வசிப்பவர்கள் உடனடியான வெளியேற்றத்தை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிக்குள் கட்டிடத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் வெளியேறாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைக்கமைய கட்டத்திற்கு சீல் வைத்து தண்டனையின் கீழ் வெளியேற்றப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இடிந்து விழும் அபாயத்தில் உள்ள குறித்த கட்டிடம் இடிந்து விழுந்தால் மக்களுக்கு பாரிய ஆபத்து காத்திருப்பதாக சோதனையிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 5ஆம் திகதி அங்குள்ளவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும் பல குடும்பங்கள் அந்த கட்டடத்தில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
You My Like This Video
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam