டேன் பிரியசாத் கொலை: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் பெயர்
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் காஞ்சிபாணி இம்ரானின் வழிகாட்டுதலின் கீழேயே அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
டேன் பிரியசாத்தை சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று(02.05.2025) மதியம் கொழும்பின் குருந்துவட்டா பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, டேன் பிரியசாத்தின் சகோதரரைக் கொலை செய்ததாக தந்தை மற்றும் மகனான பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலதிக விசாரணைகள்
இந்த சம்பத்துக்கு பிறகு அவர்கள் தலைமறைவாகினர். இந்நிலையில், டேன் பிரியசாத் கொலையின் பிறகு நடந்த விசாரணையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், காஞ்சிபாணி இம்ரானின் வழிகாட்டுதலின் கீழேயே இந்தக் கொலை நடந்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள சாலமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
