டேன் பிரியசாத் கொலை விவகாரம்: துப்பாக்கிதாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
டேன் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேக நபர் நேற்று (02.05.2025) கருவாத் தோட்டம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இன்றையதினம் (3) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு காவல் உத்தரவு
விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையுடன், சந்தேக நபருக்கு குற்றத்தில் உள்ள தொடர்பைக் குறிக்கும் விரிவான அறிக்கையையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதன்படி, சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை எதிர்காலத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 16 மணி நேரம் முன்

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
