டேன் பிரியசாத்தின் கொலையைத் தொடர்ந்து வெளியான குரல் பதிவு
அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.
பிரபல பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவரான கஞ்சிபானி இம்ரான் இந்த குரல் பதிவில் பேசியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கஞ்சிபானி இம்மரானினது குரல் பதிவு
இதன் அடிப்படையில் டேன் பிரியசாத்தின் கொலை கஞ்சிபானி இம்ரான் அல்லது வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர்களினால் திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட உள்ளிட்ட பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களுக்கு எதிராக டேன் பிரியசாத் செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலகக்குழு தலைவர்களை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டேன் பிரியசாத் கோரியிருந்தார்.
இந்த நிலையில், கஞ்சிபானி இம்ரானினது என சந்தேகிக்கப்படும் உறுதிப்படுத்தப்படாத குரல்பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. மற்றுமொரு நபருடன் கஞ்சிபானி உரையாடுவதாக இந்த குரல்பதிவு அமைந்தள்ளது.
“இதைப் பற்றி பேசி வேலையில்லை, இவர்கள் பலனற்றவர்கள், இவர்கள் அரசாங்கத்திற்கும் வீட்டுக்கும் சுமையானவர்கள். கொலை செய்தோமா இல்லையா என கேட்க வேண்டாம். நாய்கள் நன்றி கெட்டவை, முன்கூட்டியே கொன்றிருக்க வேண்டும்” என குரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குரல் கஞ்சிபானி இம்ரானினது என சந்தேகிக்கப்படுகின்றது.
“அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கிடையாது, இவர்கள் ஆட்சி செய்ய விடுகின்றார்களா, ஜனாதிபதியை இழிவுபடுத்துகின்றனர், ஜனாதிபதி பதவியில் நான் இருந்தால் இவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குத் தெரியும். இருக்கும் ஜனாதிபதி நல்லவர் என்பதனால் இவர்கள் ஆட்டம் போடுகின்றார்கள் என மேலும் குரல்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த குரல் பதிவில் பேசியது கஞ்சிபானி இம்ரான் என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
