தம்மிக்க பெரேரா நாளை பதவிப் பிரமாணம்
பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவரது பதவிப் பிரமாணம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.
தம்மிக பெரேரா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரித்திருந்தது.
ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சராக பதவி பிரமானம்
இதனையடுத்து நாளை காலை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள தம்மிக பெரேரா, நாளை மாலைக்குள் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சுப் பதவியையும் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தம்மிக பெரேராவுக்கு வழங்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு அமைச்சுக்கான செயலாளர் ஜனாதிபதியினால் முன்னதாகவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri