21ம் திகதிக்கு முன்னர் அமைச்சராக நியமிக்கப்படவுள்ள தம்மிக்க பெரேரா
வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் நாடாளுமன்றம் கூடாத நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார். நாடாளுமன்றம் அடுத்த வாரம் ஜூன் 21, 22, 23 மற்றும் 24ம் திகதிகளில் கூடவுள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் ஜூன் 21ம் திகதிக்கு முன்னர் அவர் அமைச்சராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்படி, அவர் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகிய பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த 9ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பசில் ராஜபக்சவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இலங்கையின் முதல் நிலை வர்த்தகரான தம்மிக்க பெரேரா தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த போதிலும் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என பசில் ராஜபக்ச அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
