பசில் ராஜபக்சவை உடனடியாக சிறையில் அடைக்குமாறு தேரர் போர்க்கொடி
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டிற்கு இழைத்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பசில் ராஜபக்சவை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை
“பசில் இன்று வீட்டுக்குப் போய்விட்டார், அவருக்கு இப்போது எந்தப் பொறுப்பும் இல்லை, குடும்ப அரசியலை நடத்தி வந்தவர் இன்று சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார், அதைப் பற்றி நாங்கள் பேசவில்லை.
இருப்பினும் அவர் தனது ஆட்சி காலத்தில் நாட்டிற்கு இழைத்த குற்றத்திற்காக சிறைக்கு செல்ல வேண்டும்.அவரை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
