பொதுஜன பெரமுனவுக்குள் வெடித்த மோதல்...! பசிலுக்கும் பீரிஸூக்கும் இடையில் தர்க்கம்
பசில் - பீரிஸ் மோதல்
பொதுஜன பெரமுன கட்சிக்குள் முறுகல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இந்த முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21வது வரைவு தொடர்பாக அண்மையில் பிரதமரால் கட்சி தலைவர்களின் கூட்டம் அழைக்கப்பட்டிருந்தது.
எனினும் அதில் அழைப்பு கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன பங்கேற்கவில்லை. இருப்பினும் கட்சியின் தவிசாளரான ஜி.எல்.பீரிஸ், வெளியுறவு அமைச்சர் என்ற அடிப்படையில் பங்கேற்றிருந்தார்.
இந்தநிலையில் அவரின் ஆலோசனையுடன் 21இல் திருத்தம் ஒன்றை ஜனாதிபதி, பிரதமர் ரணிலுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்
அதில் அமைச்சர்கள், பிரதமரின் ஆலோசனையின்பேரில் நியமிக்கப்படவேண்டும் என்பதற்கு பதிலாக, அமைச்சர்கள் நியமனம்,பிரதமருடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
குழுவில் பீரிஸ் இல்லை
எனினும் கட்சியின் சார்பில் ஜி.எல் பீரிஸூக்கு குறித்த யோசனையை சமர்ப்பிக்கமுடியாது என்று பசில் ராஜபக்ச தெரிவித்தநிலையில் இருவருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து பிரதமரால், பொதுஜன பெரமுன கட்சியினர் தனியாக அழைக்கப்பட்டு 21 குறித்து கலந்தாலோசனை நடத்தப்பட்டது.
இது தொடர்பான குழுவில் பசில் தலைமையில் 13 பேர் பங்கேற்றனர். இதில் மூன்று பேர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளாவர். எனினும் அதில் ஜி.எல்.பீரிஸ் இணைக்கப்படவில்லை.
பீரிஸை தொடர்ந்து இந்தியா பறக்கிறார் பஸில் ராஜபக்ச

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
