பிரபல நடிகைக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்
சிங்கள நடிகை தமிதா அபேரட்ன மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு நீதிமன்றம் விதித்திருந்த வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டே நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த தடையை நீக்கியுள்ளார்.
கொரியாவில் தொழில் வாய்ப்பு
கொரியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக தமிதா மற்றும் அவரது கணவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் தமிதா மற்றும் அவரது கணவர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்ற புலனாய்வுப் பிரிவின் கணனி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் கோரிக்கை
இந்த உத்தரவினை நீக்குமாறு தமிதா மற்றும் அவரது கணவரின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் குறித்த நிபந்தனையை தளர்த்தியுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
