கஞ்சிக்குடியாறு சந்தியில் பிள்ளையார் சிலை உடைத்து சேதம் (Photos)
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை அடையாளம் தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில குடியிருப்புக்கள் இல்லாத பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன பிள்ளையார் சிலை ஒன்றை அமைத்ததையடுத்து அதனை அந்த பிரதான வீதி ஊடாக பிரயாணிக்கும் மக்கள் வழிபட்டுவந்தனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிள்ளையார் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை விசமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.







Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
