திருமதி இலங்கை அழகி போட்டியால் தாமரை தடாகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு
கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்ற திருமதி அழகு ராணி தெரிவிற்கான இறுதிப் போட்டியில் குழப்ப நிலை ஏற்பட்டது.. இந்த குழப்ப நிலையால் தாமரை தடாகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேடை மற்றும் அறைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை திருமதி அழகு ராணி போட்டியின் இறுதி போட்டியாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக அந்த நிறுவனத்திற்கு அபராத பணம் செலுத்த நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் மகுடம் வென்ற புஷ்பிகாவின் மகுடத்தை திருமதி உலக அழகுராணி கரோலின் ஜுரி பலவந்தமாக அகற்றி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டவருக்கு வழங்கியிருந்தார்.
இதன் காரணமாக பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டதுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் சில மணித்தியாலங்களில் மகுடம் பறிக்கப்பட்ட திருமதி அழகியிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
