துறைமுகத்திலிருந்து எரிபொருள் வழங்கும் குழாய் சேதம்
துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு எரிபொருள் விநியோகிக்கும் குழாய்களில் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்புத் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கப்படும் எரிபொருள், குழாய்கள் வழியாகவே கொலன்னாவை எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.
எரிபொருள் விநியோகம்
இந்தக் குழாய்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து களனி ஆற்றின் ஓரமாக தொட்டலங்கை, தெமட்டகொடை ஊடாக கொலன்னாவை வரை நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த குழாய்களில் ஒன்று தற்போது சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் மற்றைய குழாய் மூலம் எரிபொருள் விநியோகத்தை சீராக மேற்கொள்ள முடியுமாக இருப்பதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri