டலஸ் அழகப்பெருமவுடன் இணையும் விமல் கட்சி!
எதிர்வரும் தேர்தலில் மேலவை இலங்கை கூட்டணியானது, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமான குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலவை இலங்கை கூட்டணி மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையில் நேற்று (20.09.2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிரதான எதிர்கட்சி

எவ்வாறாயினும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணைந்து செயற்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தேர்தல் ஒன்று நடத்தினால் அதில் போட்டியிடுவதற்கு எமது கட்சி தயாராக இல்லை. இருப்பினும் டலஸின் கட்சியுடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
போட்டிக்கு தயாராகும் வேலை

அத்துடன் டலஸ் கட்சியினர் எங்களை போன்று எங்களுடன் மொட்டு கட்சியில் இருந்தவர்கள். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இருக்கின்றார்.
தற்போது போட்டிக்கு தயாராகும் வேலையே உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri