சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை

United States of America Tibet Dalai Lama Epstein Files
By Shadhu Shanker Feb 08, 2026 10:07 PM GMT
Report

திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கும், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அமெரிக்க நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டைனுக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான ஊடக செய்திகளை தலாய் லாமாவின் அலுவலகம் கடுமையாக மறுத்துள்ளது.

அமெரிக்க நீதித்துறை (US DoJ) வெளியிட்ட எப்ஸ்டைன் கோப்புகளில், தலாய் லாமாவின் பெயர் 169 முறை இடம்பெற்றுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

ஜெஃப்ரி எப்ஸ்டைன் வழக்கு

இதன் பின்னணியில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சில தகவல்களின் படி, எப்ஸ்டைன் தொடர்பான ஆவணங்களில் இடம்பெற்ற தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் ‘Massage for Dummies’ என்ற புத்தகத்தின் அட்டவணைப் பட்டியலில் தலாய் லாமாவின் பெயர் குறிப்பிடப்பட்டதாக கூறப்பட்டது.

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை | Dalai Lama Never Met Epstein

அந்த புத்தகம் எப்ஸ்டைன் வழக்கு தொடர்பான ஆவணங்களில் ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலாய் லாமாவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “எப்ஸ்டைன் கோப்புகள் தொடர்பான சமீபத்திய ஊடக செய்திகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள், தலாய் லாமாவை ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் இணைக்க முயற்சிகின்றன” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “தலாய் லாமா ஜெஃப்ரி எப்ஸ்டைனை ஒருபோதும் சந்தித்ததில்லை. அவரின் சார்பில் எவரும் எப்ஸ்டைனுடன் சந்திப்பு அல்லது தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்பட்டதும் இல்லை” என அந்த அறிக்கையில் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

அறிவாற்றலில் பின்தங்கும் GEN Z தலைமுறையினர்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

அறிவாற்றலில் பின்தங்கும் GEN Z தலைமுறையினர்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தலாய் லாமா மறுப்பு  

சில ஊடகங்கள், 2012 ஒக்டோபர் மாத மின்னஞ்சல்கள் மூலம் தலாய் லாமா மற்றும் எப்ஸ்டைன் சந்திக்கவிருந்ததாகவும், ஒரே நிகழ்வில் பங்கேற்க திட்டமிடப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தன.

இதற்கிடையில், ஐரோப்பிய ஊடக நிறுவனமொன்று தலாய் லாமாவின் சில பின்தொடர்பவர்கள் (followers) எப்ஸ்டைனை சந்தித்திருக்கலாம் என தெரிவித்தது.

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை | Dalai Lama Never Met Epstein

இதனால், மறைமுக தொடர்புகள் குறித்து ஊகங்கள் அதிகரித்தன. கடந்த ஆண்டு, பத்திரிகையாளர் மைக்கேல் வுல்ஃப், Daily Beast பாட்காஸ்டில் கலந்து கொண்டு, எப்ஸ்டைன் தனது மான்ஹாட்டன் இல்லத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படும் “salon” சந்திப்புகளில் பல பிரபலங்கள் கலந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

அந்தப் பட்டியலில் தலாய் லாமாவின் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்றுகளை தொடர்ந்து, சுயாதீன பத்திரிகையாளர் ஜேக்கப் சில்வர்மேன், “Why Was The Dalai Lama At Jeffrey Epstein's House?” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார்.

கனடாவுக்கான மாணவர் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்

கனடாவுக்கான மாணவர் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்

மீண்டும் சர்ச்சை

அதில், தலாய் லாமாவின் அலுவலகம் எப்ஸ்டைனிடமிருந்து நன்கொடை பெற்றதா அல்லது எந்தவொரு தொடர்பும் இருந்ததா என்ற கேள்விகளுக்கு அப்போது பதில் அளிக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள பெரிய அளவிலான எப்ஸ்டைன் ஆவணங்கள், இந்த விவகாரத்தை மீண்டும் சர்ச்சைக்குள் இழுத்துள்ளது.

சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை | Dalai Lama Never Met Epstein

அந்த ஆவணங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகள், 2,000க்கும் மேற்பட்ட காணொளிகள், 1.8 லட்சம் புகைப்படங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆவணங்களில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உலகப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் டொனால்ட் ட்ரம்ப், பில் கிளின்டன், பில் கேட்ஸ், எலான் மஸ்க் உள்ளிட்டோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US