முதல் முறையாக கோமாளியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தலதா கண்காட்சி! ஞானசார தேரர்
வரலாற்றில் முதல் தடவையாக புனித பொருட்கள் காட்சிப்படுத்தும் புனித தலதா கண்காட்சி கோமாளி ஒருவரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பெரும் அதிர்ச்சி
வரலாற்று காலம் முதல் தலதா கண்காட்சி மன்னர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை புனித பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
செலவுகளை குறைத்தல் என்பது யாசகம் பெறுவதோ அல்லது எமது இயலாமையை உலகிற்கு காண்பிப்பதோ கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலதா கண்காட்சி
தலதா கண்காட்சிக்கு இம்முறை அரச அனுசரணை உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
கண்டி நகரம் கடந்த காலங்களில் போன்று பௌத்த கொடிகளினாலும் மின் விளக்குகளினாலும் அங்கரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை கண்காட்சிக்கு மாநாயக்க தேரர்கள் மற்றும் தியவடன நிலமே போன்ற அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.