தினமும் செலவுகளுக்காக வெளிநாடுகளிடம் கடனை பெறும் நிலைமை
இலங்கையின் நாளாந்த செலவுகளை ஈடு செய்ய வெளிநாடுகளில் இருந்து சுமார் 600 கோடி ரூபாவை கடனாக பெற நேரிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தினமும் செலவுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் தேவை

இலங்கையின் நாள் வருமானம் 400 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நாட்டின் நாளாந்த செலவுகளுக்கு சுமாார் ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
தேவைப்படும் தொகையை ஈடு செய்வதற்காக வெளிநாடுகளிடம் இருந்து 600 கோடி ரூபாவை கடனாக பெற வேண்டியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக இலங்கை ஏற்கனவே கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வேறு ஒரு அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வதியம் ஆகியவற்றை செலுத்தியாக வேண்டும். இவை கட்டாயமான செலவுகள் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி பற்றாக்குறை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக அத்தியவசிய உணவு பொருட்கள், எரிபொருள், மருந்து போன்றவற்றை இறக்குமதி செய்ய வெளிநாடுகளில் இருந்து கைமாற்று கடனை பெற வேண்டியுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் இருந்து இலங்கை அரசு கைமாற்று கடனாக டொலர்களை பெற்று வருகிறது. இந்தியாவின் இந்த கடனுதவியின் கீழ் தற்போது நாட்டிற்கு தேவையான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri