அரசியலுக்குள் உள்நுழையும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்! நம்பிக்கையை பாதுகாப்பதாக உறுதி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பொலன்னறுவை - மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமனத்தை தஹாம் சிறிசேன இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த பதவி தொடர்பான நியமனக் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையினால் பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை தஹாம் சிறிசேன வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கையைப் பாதுகாப்பேன்
தம்மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரினதும் நம்பிக்கையைப் பாதுகாத்து நிறைவேற்றுவேன் என அவர் கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சியினால் வழங்கப்பட்ட பொறுப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவையை செய்ய தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பேரவையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.