சென்னையில் வரலாறு காணாத மழை: போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் - தமிழ்நாடு அரசு வேண்டுகோள் (Video)
சென்னை உள்ளிட்ட தமிழக வடமாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்தில் படிப்படியாக காற்றின் வேகமும் மழையும் குறைய தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பெய்துவரும் பெரும் மழையால், வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை மாநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#ChennaiRains #ChennaiFloods Pallikarani (velachery) Be safe pic.twitter.com/8PW74ZNvb7
— Gokul Tamilselvam (@Gokul46978057) December 4, 2023
இதில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள இருவரை அடையாளம் காண முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பொது மக்களை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை - மிரட்டும் மிக்ஜாம் புயல்
தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 24 அடியில் 22.41 அடி நீர் நிரம்பியதால் ஏரியிலிருந்து விநாடிக்கு 8,000 கன அடி நீர் திறந்து விடப்படுகின்றது.
அதனால், அடையாறு, கூவம் கரையோரப் பகுதி மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் “போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏற்பட்டிருக்கும் மழை பாதிப்பு தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தமிழ்நாடு அரசு 1913 என்ற எண்ணை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
