ஆசிரியர் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பொது மக்களை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை - மிரட்டும் மிக்ஜாம் புயல்
ஆசிரியர் சம்பள முரண்பாடு
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இம்மாதம் பாடசாலை விடுமுறை முடிந்து பெப்ரவரி 2 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் புத்தாண்டு தொடர்பான பாடசாலை தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் கல்வி முக்கியம் என்பதால், எத்தனை சவால்கள் இருந்தாலும் அடுத்த ஆண்டு பாடப்புத்தகங்களுக்கு 1,020,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீருடைகளுக்கு 6,500 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
காலணிகளுக்கு 2,200 மில்லியன் மதிய உணவிற்கு 16,000 இவை அத்தியாவசியமானவை.
இதேவேளை, ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு அருகில் நகரும் “மிக்ஜாம்” சூறாவளி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
