மாற்றத்திற்கு தயாராகும் மக்கள்! கொழும்பில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது இலங்கையின் பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கையில் பாரியளவான மாற்றம் பதிவாகியுள்ள போதும் எரிபொருள் நிலையங்களை நோக்கி காணப்படும் வாகன வரிசைகள் நீண்டு கொண்டே தான் இருக்கின்றன.
இந்த நிலையில் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளுக்காக மாற்று நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்து வருவதுடன், அரசாங்கமும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி தற்போது பெரும்பாலானோர் துவிச்சக்கரவண்டி பாவனைக்கு மாறியுள்ளதுடன், அரசாங்கமும் அவர்களுக்கு உதவும் வகையிலான நடைமுறைகளை முன்னெடுத்து வருகிறது.
ஏற்கனவே கொழும்பின் மிகச்சில பகுதிகளில் வீதிகளில் துச்சக்கரவண்டி செலுத்துவதற்கான வழித்தடம் இருந்தது. எனினும் தற்போது கொழும்பின் சிறிய பிரதான வீதிகளிலும், கிளை வீதிகளிலும் கூட துவிச்சக்கரவண்டி வழித்தடத்தை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை துவிச்சக்கரவண்டிகளின் விலைகளும் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், கையிருப்பும் முடிந்துள்ளதாக துவிச்சக்கரவண்டி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
