இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான இணைய வழிக்குற்றங்கள் அதிகரிப்பு
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான இணைய வழிக்குற்றங்கள் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மகளிர் அரசியல் கல்வியகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளை போன்ற அமைப்புகள், இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த விடயத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளையின் அமைப்பாளர் ஈ.எம்.பண்டார மெனிகே இது தொடர்பில் கருத்துரைக்கையில்,
இலங்கையில் தொற்றுநோய் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான (சைபர் செக்ஸ்) இணையக்குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளன.
அத்துடன் இந்த காலகட்டத்தில் பொதுவாக பெண்களை துன்புறுத்தும் முறைப்பாடுகள் 33 சதவீதம் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளார்.
கோவிட் தொற்றுநோய் தோன்றியதிலிருந்து ஸூம் வகுப்புகள் நடத்தப்படுவதால், பாடசாலை மாணவர்கள் இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். வீட்டு வன்முறை கூட அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை தாய்மார்கள் மற்றும் மகள்மார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மினி வீரசூரிய தமது கருத்தில்,
சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்கள், குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களைத் துன்புறுத்துவதைத் தடுக்க ஒரு ஒழுங்குமுறை அமைப்பு தேவை என வலியுறுத்தியுள்ளார்.
சில தொழிற்சாலை உரிமையாளர்கள், குறிப்பாக ஆடை தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், தொற்று நிலைமை இருந்தபோதிலும் உற்பத்தி இலக்குகளை பூர்த்தி செய்வதற்காக ஊழியர்களை இடைவெளி இல்லாமல் வேலை செய்ய கூறுகிறார்கள்.
சில முதலாளிகள் தங்கள் தொழிற்சாலைகளை கிருமி நீக்கம் செய்யத் தவறியுள்ளார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
