அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
நாட்டில் சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானித்துள்ளது.
இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனை தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதல்கள்
இதேவேளை அரச நிறுவனங்களின் வலைத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 40 அரச நிறுவனங்களின் வலைத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் செயற்பாடு முதற்கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரச நிறுவனங்களின் வலைத்தளங்களை குறி வைத்து சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam
இங்கிலாந்து அணியின் மது அருந்தும் கலாச்சாரம் குறித்த குற்றச்சாட்டு: பென் ஸ்டோக்ஸ் பதிலடி News Lankasri