விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரசன்னவின் மேன்முறையீட்டு மனு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்ட ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலத்தில் காணியொன்றை மண்நிரப்புவது தொடர்பில் வர்த்தகர் ஒருவரிடம் 63 மில்லியன் ரூபா கப்பம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில் அவருக்கு கடந்த 2023ஆம் வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
அதனை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீட்டு மனு நேற்று நீதியரசர்கள் மாயாதுன்னே கொரயா, குமாரன் ரத்னம், சஷி மகேந்திரன், தமித் தொடவத்தை, அமல் ரணராஜா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வின் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது பிரசன்ன ரணதுங்கவின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும், மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 05,13 மற்றும் 16ம் திகதிகளில் நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri