இலங்கையின் இணையத்தளங்கள் மீது இணையத்தாக்குதல்
இலங்கையில் இன்று காலை இணையத்தாக்குதலுக்கு உள்ளான “.lk” முகவரிகளுக்குரிய இணையத்தளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட “.lk” முகவரிகளைக் கொண்ட பல இணையத்தளங்கள் இன்று காலை தாக்குதலுக்கு உள்ளாகின. இதனையடுத்து தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு மற்றும் கணணி அவசரப்பிரிவு என்பன இணைந்து இயல்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த இணையத்தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணையத்தள முகவரி பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு google.lk மற்றும் .lk ஆகிய இணைய முகவரிகளை கொண்ட இணையத்தளங்கள் சிலவற்றின் மீது இன்று முற்பகல் இணையத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளங்களுக்குள் பிரவேசிக்கும் நபர்களை வேறு இணையத்தளங்களுக்கு செல்லும் வகையில் சிலர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
