நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஹெக்கர் சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம்
எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திறைசேரியில் ஹெக்கர் தாக்குதலில் மாயமான 2.5 அமெரிக்க டொலர் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கோரிய ஒருநாள் விவாதத்தை வழங்க அரசாங்கத் தரப்பு மறுத்துள்ளதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்
தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் ஐந்தாம் திகதி மீள கூட்டப்படவுள்ளது.
அது தொடர்பான கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் சபாநாயகர் தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
அக் கூட்டத்தில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் முன் வைத்த திறைசேரியில் ஹெக்கர் தாக்குதலில் மாயமான 2.5 அமெரிக்க டொலர் தொடர்பான ஒரு நாள் விவாதத்தை தர மறுத்தது.
நிதி தொடர்பான பொறுப்பு நாடாளுமன்றைத்தை சார்ந்ததாகும். ஆனால் குறித்த சம்பவம் நடந்து மூன்று நான்கு மாதங்கள் கடந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் பொறுப்பு என்ற வகையில் இந்த கோரிக்கையை முன்வைத்தோம்.
எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் பின்னர் எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சிறு கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்து கொண்டு மக்களின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் நாடாளுமன்றத்தில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam