மலையக மாணவர்களுக்கான தமிழக அரசின் உதவிகள் குறித்து விசேட கலந்துரையாடல்
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் தொழில் பயிற்சி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தொழில்நுட்ப சார்பு உதவிகளை பெறுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.
தமிழக மாநில அரசின் தொழில்நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து கலந்துரையாடியே போதே அவர் இவ்வாறு பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மலையகம் - 200 நிகழ்வு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொடர்பான கற்கைநெறி
மேலும், மலையகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு விசேடமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொடர்பான கற்கைநெறிகளுக்கான உதவிகள் பெறுவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |