சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்த ரெலோ: இணைந்து செயற்பட விக்கி தயார்
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
யாழ். கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் திங்கட்கிழமை இரவு இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன்,
கூட்டணிகள்
ஜனாதிபதியுடன் சந்திப்பு தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் சுரேன் என்னுடன் கலந்துரையாடினார்.
இதன்போது ஊடகவியலாளர் தமிழீழ விடுதலை இயக்கத்தையும் உங்கள் கூட்டணிகளில் அமைத்து தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் அவர்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
