பல்கலைக்கழகத்திற்கான வெட்டுப்புள்ளி தொடர்பில் வெளியான அறிவிப்பு
பல்கலைக்கழகத்திற்குரிய வெட்டுப்புள்ளி விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்குரிய வெட்டுப்புள்ளி
2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழகத்திற்குரிய வெட்டுப்புள்ளிகளே வெளியிடப்படவுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெட்டுபுள்ளி அடங்கிய விபரங்கள் வெளியிடப்படும்.
இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியினை நீக்குவதற்கான பத்திரம் எதிர்வரும் 28 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
