இலங்கையில் போலியான மருந்து விற்பனை செய்த நிறுவனம்
சுகாதார அமைச்சுக்கு போலியான மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை விற்றதாகக் கூறப்படும், இலங்கை நிறுவனமான Isolez Biotech Pharma AG (Pvt) Ltd. உத்தியோகபூர்வ வழிகள் மூலம், மனித இரத்த பிளாஸ்மாவை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மருந்துகளையோ அல்லது மூலப்பொருளையோ இறக்குமதி செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் நிறுவனத்தின் உரிமையாளர் ஹேவகே சுதத் ஜானக பெர்னாண்டோ இந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சர்ச்சைக்குரிய கேள்விப்பத்திரத்துக்கு முத்திரையிட்டு பணத்தை; செலுத்திய சுகாதார அமைச்சு அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
7,500 மனித இம்யூனோகுளோபுலின் பொதிகளுக்கான முதல் மேற்கோளை ஐசோலெஸ் 12 மாதங்களுக்கு முன்பு, அக்டோபர் 2022 இல் சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ விநியோகப் பிரிவில் (MSD) சமர்ப்பித்தது.
நோயாளிகளுக்கு பாதகமான எதிர்விளைவுகள்
இதற்கான செலவு 975,000 டொலர்கள் அதாவது 316 மில்லியன் ரூபாய்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குப்பிகள் ஜூலை மாதம் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இதற்கிடையில் மனித இம்யூனோகுளோபுலினுக்கான 'மூலப்பொருட்களை' இறக்குமதி செய்ய குறித்த நிறுவனம் திட்டமிட்டிருந்ததை சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர் மேற்கோள்கள் காட்டியுள்ளன.
எனினும் 2022 மற்றும் 2023க்கான சுங்கத் தரவுகள், உத்தியோகபூர்வ வழிமுறைகள் மூலம் இலங்கைக்கு இரத்த பிளாஸ்மாவை இறக்குமதி செய்த நிறுவனங்களின் பட்டியலில் இந்த நிறுவனம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இம்யூனோகுளோபுலின், சில நோயாளிகளுக்கு பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்திய
பின்னரே மருந்து பற்றிய சந்தேகங்கள் எழுந்தன.
இதேவேளை இந்த குப்பிகளின் உள்ளடக்கம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.