இலங்கையில் தற்போது டொலர்களோ ரூபாய்களோ இல்லை (Photo)
தற்போது நாட்டில் டாலர்களோ ரூபாய்களோ இல்லை, எதிர்காலத்தில் நாட்டைக் கைப்பற்றும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான பயிற்சியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டமர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு யோசனை பெறுவதற்காக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதாக உணரப்படுகின்றது.
தற்போது நாட்டில் டாலர்களோ ரூபாய்களோ இல்லை, எதிர்காலத்தில் நாட்டைக் கைப்பற்றும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான பயிற்சியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Had 3-hour meeting re #SriLankaEconomicCrisis w Gov @CBSL and Sec Treasury w @sajithpremadasa @EranWick @KabirHashim4. Situation beyond grave. Absolutely no funds; neither dollars nor rupees. Going to be unenviable gigantic challenge for anyone to save #SriLanka. #GotaGottaGo pic.twitter.com/cCfGQ0zq1P
— Harsha de Silva (@HarshadeSilvaMP) May 10, 2022