கொரோனா தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சரின் தற்போதைய நிலை! கணவர் வெளியிட்ட தகவல்
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தற்போதை நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டாலும் அமைச்சர் தற்போது ஆபத்தான நிலையில் இல்லை எனவும் அவர் குணமடைந்து வருவதாகவும் அமைச்சரின் கணவர் காஞ்சனா ஜயரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
“இந்த வார தொடக்கத்தில் சுவாசிக்க கஷ்டங்கள் ஏற்பட்டன. அதிக காய்ச்சல் மற்றும் சளி நோயால் பாதிக்கப்பட்டதால், ஐ.டி.எச் இன் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அப்போது அறிவுறுத்தினர்.
எனினும், அமைச்சர் ஆபத்தான நிலையில் இல்லை. அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் சளி உள்ளது. அவர் நலமடைந்து வருகிறார்” என காஞ்சனா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையின் போதும் அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டிருந்தது.
அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள எவருக்கு தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் அமைச்சரின் குடும்பம் தொடர்ந்து தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்த ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா?... போட்டோவுடன் இதோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
