கண் முன்னே அழியும் நல்லூர் மந்திரி மனை..! தமிழரசுக் கட்சியின் தலைவர் கோரிக்கை

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government
By Theepan Apr 08, 2026 05:08 AM GMT
Report

யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது என தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு வாரங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இல்லையேல் இன்னும் ஒரு மழை வந்தால் இந்த கட்டிடம் முழுமையாக இடிந்துவிடக்கூடிய நிலையில் இருக்கிறது. பாராமுகமாக இருந்தால் அழிந்து விடும் என்ற தென்னிலங்கை நிகழ்ச்சி நிரலுக்கு துணை போவதாக இருந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

திடீர் தொழிநுட்பகோளாறு!அடையாள அட்டைகளை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

திடீர் தொழிநுட்பகோளாறு!அடையாள அட்டைகளை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று(07.04.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் மந்திரிமனை அழியும் அபாயம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் மந்திரிமனை அழியும் அபாயத்தில் உள்ளது. அதன் ஒரு பகுதி கடந்த மழைக்கு இடிந்து விழுந்துள்ளது. அதன் அருகில் வசிப்பவன் என்ற வகையில் எனக்கு அது தொடர்பாக அக்கறை உள்ளது. கடந்த காலத்திலிருந்து பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் சாத்தியப்படவில்லை. அது ஒரு நம்பிக்கை பொறுப்பாளர்களின் சொத்தாக இருக்கிறது.

கண் முன்னே அழியும் நல்லூர் மந்திரி மனை..! தமிழரசுக் கட்சியின் தலைவர் கோரிக்கை | Current Status Of Nallur Mantri Manai Temple

இது தொடர்பாக அவர்கள் விரைவாக கவனத்தில் எடுக்க வேண்டும். மேலும், நம்பிக்கை பொறுப்பாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தோ அல்லது தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்தோ இவற்றை செயல்படுத்த வேண்டும்.

நிதி சம்பந்தமான விடயங்களுக்கு நாங்கள் ஏற்பாடு செய்வோம். நல்லூர் மந்திரிமனையை நம்பிக்கை பொறுப்பாளர் புனரமைப்பு செய்வது என்று சொன்னால், ஏற்கனவே நிதி இல்லை என்று தெரிவித்தார்கள். அதற்கு செலவில்லாமல் நாங்கள் நிதி உதவி செய்வதாக உறுதியளிக்கிறோம்.

தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை

அந்த முடிவுக்கு அவர்கள் வரவேண்டும். இல்லையென்றால் தொல்லியல் திணைக்களம் பொறுப்பு எடுத்து செய்வதற்கு நம்பிக்கை பொறுப்பாளர்கள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

அந்த அங்கீகாரத்தின் ஊடாக திணைக்களத்துடன் நாங்கள் ஒரு சிறிய ஒரு அமைப்பை உருவாக்கி நிதியை பெற்று இந்த வேலையை உடனடியாக செய்ய முடியும்.

கண் முன்னே அழியும் நல்லூர் மந்திரி மனை..! தமிழரசுக் கட்சியின் தலைவர் கோரிக்கை | Current Status Of Nallur Mantri Manai Temple

ஆகக் கூடியது இரண்டு கிழமைக்குள் இதனை நிறைவேற்றுவதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும். நல்லூர் மந்திரிமனையை இவ்வாறு விடுவது முழுமையாக அழிய விடுவது தான் நோக்கமா என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது. அதற்க்கு அருகில் இருப்பதால் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு.

யாழ்ப்பாண தமிழ் மன்னரின் ஒரே ஒரு வரலாற்றுச் சின்னம் அழிவடைந்து போவதை ஏற்க முடியாது. அதற்கான அக்கறையோடு கடந்த காலத்திலிருந்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இரண்டு சாரார்களும் ஒவ்வொரு தடையை போட்டு வந்திருக்கிறார்கள். நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. தற்போது இந்த விடயம் முன்னெடுக்கப்பட வேண்டும். இது சாரரும் தங்கள் பதிலை இரண்டு கிழமைக்குள் வெளிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்  என்றார். 

இலங்கையில் 12 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு! பாரிய பின்னடைவில் வட மாகாணம்

இலங்கையில் 12 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு! பாரிய பின்னடைவில் வட மாகாணம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம்



மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US