நெருங்கிய உறவினரின் திருமணத்தில் மகிந்த ராஜபக்ச! உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குடும்பத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது மிகவும் நலமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஷிரந்தி ராஜபக்சவின் நிலை
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் முதலில், ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, எம்.ஐ.சி.யூ பிரிவிலும், பின்னர் ஐ.சி.யூ பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு தற்போது சாதாரண வார்ட்டிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், வீடு திரும்பி நேற்று நடைபெற்ற திருமணத்திற்கு சென்றிருந்ததாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அநுரவின் தலையை ஏழு துண்டுகளாக உடைக்க நள்ளிரவில் சூனியம் செய்யும் பிக்குகள் - பின்னணியில் தீவிர திட்டம்
YOU MAY LIKE THIS
கனமழை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை! சுற்றுலாப் பயணங்களை தவிருங்கள்: அனர்த்த முகாமைத்துவ மையம் வேண்டுகோள்
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு