லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்
நாடு முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்குள் 350,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றி வந்த 'CORINTHIAN ' கப்பல் நேற்று (22) நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிவாயு இருப்புகளை பதுக்கிவைப்பதை தவிர்க்கவும்
மேலும், நேற்று மதியம் கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும் பணி தொடங்கியதால், 350,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட முடியும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த எரிவாயு இருப்பு கிடைத்தவுடன், நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் தொடரும் என்றும், அதனால் நுகர்வோர் வழக்கம் போல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தேவையற்ற முறையில் எரிவாயு இருப்புகளைப் பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு நுகர்வோரை அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.