இலங்கையின் தற்போதைய கொரோனா நிலவரம் - வெளியாகியுள்ள அறிவிப்பு
இலங்கைக்குள் இன்று மாத்திரம் 737 கொரொனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கைக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59167 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுவோரின் எண்ணிக்கையும் 8547 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் 59 ஆயிரத்தைக் கடந்தது கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை! - இன்றும் 737 பேர் அடையாளம்
இலங்கையில் இன்றும் 737 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 55 ஆயிரத்து 288 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றாளர்களில் 50 ஆயிரத்து 337 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 547 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri