சீனாவுக்கான நாணயம் இலங்கையில் வெளியிடப்பட்டது!
இலங்கை அரசுக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ச கலையரங்கின் முன் பக்கத் தோற்றமானது, நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது.
கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் "இலங்கை - சீனா 65 ஆண்டுகள்" என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் "சீன கம்யூனிஸ்ட் கட்சி" என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர்
சூடுபிடிக்கும் காவி உடை களையப்பட்ட விவகாரம் - அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் மகா சங்கத்தினர்
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri