இவ்வருடம் டொலருக்கு நிகராக அதிக தேய்மானம் கொண்ட நாணயங்களின் பட்டியல்:இலங்கைக்கு கிடைத்த இடம்
இந்த வருடம் அமெரிக்க டொலருக்கு நிகராக அதிக தேய்மானத்தை கொண்ட நாணயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் முதல் ஐந்து நாட்டு நாணயங்களில் இலங்கை ரூபாவும் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் சிம்பாப்வேயின் நாணயமான டொலர் உள்ளதுடன், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் அதன் பெறுமதி 77.78 சதவீமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி
வெனிசூலாவின் பொலிவர் மற்றும் கியூபாவின் பெசோ ஆகிய நாணயங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
இதற்கமைய குறித்த பட்டியலில் அதிக தேய்மானத்தை கொண்ட நாணயங்களில் இலங்கை ரூபா நான்காவது இடத்தில் உள்ளது.
அந்தவகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 49.17 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.