இலங்கையில் தற்போதுள்ள முடக்கம் - சிறந்த பிரதிபலனை பெற இரு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அறிவிப்பு
நாட்டில் தற்போதுள்ளதைப் போன்று இறுக்கமற்ற முடக்கம் தொடர்ந்தும் காணப்படுமாயின் கோவிட் கட்டுப்படுத்தலில் சிறந்த பிரதிபலனைப் பெற இன்னும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இறுக்கமான முடக்கத்தின் மூலம் 10 நாட்களில் பெற்றிருக்க வேண்டிய பிரதிபலனையே ஒரு மாதத்தின் பின்னர் தற்போது பெற்றுள்ளோம் என்று சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், உலகில் அதிக சந்தர்ப்பங்களில் முடக்கத்திற்கு சென்ற ஒரேயொரு நாடு இலங்கை என்றும், முடக்கத்தின் போது அதிகளவு போக்குவரத்துக்கள் இடம்பெறும் ஒரேயொரு நாடு இலங்கை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri