எதிர்வரும் 3ஆம் திகதி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து வெளியான அறிவிப்பு
எதிர்வரும் 3ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தினத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாகுமா என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எட்டவில்லையென என பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.
மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மிரிஹானவில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
