உருளைக் கிழங்கு செய்கைக்கு மானியத்தினை பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை
வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இன்றையதினம் (26.12.2023) குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
இந்த வருடம் நவீன மயப்படுத்தப்பட்ட மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வடக்கு விவசாயிகளுக்காக எடுத்துவரப்பட்ட சுமார் 21,000 கிலோ உருளைக் கிழங்கு பயன்படுத்த முடியாத நிலையில் தொடர்பாகவும் இச்சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
